களுவாஞ்சிகுடி பிரதான வீதி மற்றும் சந்தை பகுதியில் விசேடடெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் .

 


தூய்மைப் படுத்தும் செயற்பாட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதான வீதி மற்றும் சந்தை பகுதியில்  விசேடடெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம்  இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ஏ.அபயவிக்கிரம தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடிப் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.கே.பண்டார, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய சுற்றாடல் பொறுப்பதிகாரி ஏ.சுமன், பொதுச் சுகாதார பரிசோதகர் குழாம் மற்றும் அப்பகுதி பிரதேச பொதுமக்கள் என பலரும் ஒன்றிணைந்து இச்சிரமதானப் பணியை முன்னெடுத்திருந்தனர்.