சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பலர் இன்றும் சிறையில் உள்ளார்கள்.

 


 

 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பலர் இன்றும் சிறையில் உள்ளார்கள். இரண்டு பிரதான குண்டுதாரிகளின் தந்தையான இப்ராஹிம் வெளியில் உள்ளார்.

 இவரது சொத்துக்களை அரசுடமையாக்கி குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியில் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

 கொழும்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.