FREELANCER
களுவாஞ்சிகுடி சிலோன் நேசிங் கல்லூரியில் தாதிய உதவியாளர் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த தாதிய உதவியாளர்களுக்கான தொப்பி அணிவித்து பட்டமளிக்கும் நிகழ்வு சிலோன் நேர்சிங் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெயானந்தம் மியூறியா டிலாணி அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் இடம் பெற்றது .
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா யுலேகா முரளிதரன் கலந்து சிறப்பித்தார் .
கௌரவ அத்திதியாக அவுஸ்திரேலியா Rev.ரவிக்குமார் ராஜதுரை கலந்து கொண்டார் .
விசேட அதிதியாக அம்பாறை வைத்தியசாலை வைத்தியர் கோவூர் ,மக்கள் வங்கி முகாமையாளர் E.G.பௌல் பிரகாஷ் ,Rev A.ஜெஹன்தன் ,பொறியிலாளர் அன்டன் தம்பி முத்து , மக்கள்வாங்கி உதவி பிராந்திய முகாமையாளர் N. தினேஷ் குமார் , வன இலாகா அதிகாரி ஞானராஜா சாம் கேதீஸ் அவுஸ்திரேலியாM.M.M.M. மவுபிராஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சிலோன் நேசிங் கல்லூரியில் ஒரு வருட கால தாதிய உதவியாளர் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த 100 தாதிய உதவியாளர்களுக்கு தொப்பி அணிவிக்கப்பட்டு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இதன்போது பதக்கம் அணிவிக்கப்பட்டு, நினைவுச் சின்னமும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்தோடு தாதிய கற்கை நெறியினைப் பூர்த்தி செய்து வெளியேறி மருந்தகங்கள் , தனியார் வைத்திய சாலை மற்றும் ஆய்வுக்கூடங்களில் பணியாற்றும் தாதியர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.
கௌரவிக்கப்பட்ட பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .