NPP தமிழ் வட கிழக்கை பிரதிநுவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓர் சவால் நீங்கள் முடிந்தால் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பில் பிரதமரிடம் கேள்வி கேளுங்கள். அதன் பின்னர் பார்ப்போம். நான் காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், காணி அபகரிப்பு, மண் அபகரிப்பு, மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியல் அமைப்பு, தமிழ் மக்களுக்கு இவ் அரசு என்ன செய்துள்ளது என்பதனை பற்றி கேட்பேன். முடிந்தால் நீங்கள் வரும் அமர்வில் கேள்வியினை கேளுங்கள்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபைக்கு
போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் நேற்று மாலை மண்டூர்
கணேசபுரம், கண்ணகி விளையாட்டுக் கழக மைதான அரங்கில் நடைபெற்றது. அதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சவால் விடுத்தார்