தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவனின் மறைவுக்கு ஜனாதிபதி நெகிழ்ச்சியான பதிவை இட்டுள்ளார்.

 

அண்மையில் காலமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவனுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நெகிழ்ச்சியான குறிப்பை இட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பதிவு;

“பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது.”
உங்களை இழந்தது மிகப்பெரிய இழப்பு…

நீங்கள் விரும்பும் நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

சகோதரர் கோசலா,
உங்களுக்கு புரட்சிகரமான வணக்கம்!”

கடந்த பொதுத் தேர்தலில் ருவன்வெல்ல தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) காலமானார்.

அவர் இறக்கும் போது அவருக்கு 38 வயது.