வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை பிரதேசத்தில் (காகித நகர்) கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.








வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை பிரதேசத்தில் (காகித நகர்) கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.


சடலமாக மீட்கப்பட்டவர் பாற்சபை வீதி, காவத்தமுனை எனும் முகவரியை சேர்ந்த (வயது 28) சீனி முஹம்மது தஸ்லீம் என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

குறித்த இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரனை அதிகாரி பார்வையிட்டதுடன் ஜனாஸாவை மருத்துவ பரிசோதனைகக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பணிக்கப்பட்டதன் அடிப்படையில் ஜனாஸா வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்காலாம் என சந்தேகிப்பதுடன், மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ந குகதர்சன்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளத்துச்சேனை, பேரில்லாவெளியில் நேற்றிரவு 11 மணியளவில் 65 வயதுடைய வயோதிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட நபர் கணபதிப்பிள்ளை தாமோதரம் (வயது 63) என அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், கொலையாளிகள் அயலில் வசித்து வந்த மாவடிவேம்பை சேர்ந்தவர்கள் என சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர்.

கொலைக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி திரு லசந்த பண்டாரவின் வழிகாட்டலில் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி திரு சம்பத் தலைமையிலான வை.தினேஷ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  ந.குகதர்சன்