இலங்கையில் எந்த ஒரு அரசாங்கமும் 8 மாத காலத்தில் 3 தேர்தல்களை வைத்த வரலாறு இல்லை கடந்த தேர்தல்களில் மக்கள் விட்ட தவறை தற்போது நன்கு உணர்ந்துள்ளனர் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் வேட்பாளர் எஸ் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்
இலங்கையில் தேர்தல்களை வைத்து அரசியல் செய்த காலகட்டத்தில் எமது கட்சிக்கு மாவட்டத்தில் தற்போது ஒரு முகவரி கிடைத்துள்ளது அதற்கு உதாரணம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம்ஆகும்
எனவே இங்குள்ள சபைகள் யாவும் எமது கட்சியின் வசம் கிடைக்க வேண்டும் இங்குள்ள பல அரசியல்வாதிகள் அபிவிருத்தி என்ற போர்வையில் தாங்கள் வளர்ந்துள்ளனர் ஆனால் அரசியல் என்பது மக்களுக்கான பணி
என தேசிய மக்கள் சக்தி கட்சியின் மத்திய செயற்பாட்டு குழு உறுப்பினரும்
மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் வேட்பாளரும் முன்னாள் கிழக்குப்
பல்கலைக்கழக விரிவுரையாளருமான எஸ் பிரேம்குமார் மட்டக்களப்பில் இடம்பெற்ற
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்