மட்டக்களப்பு பார் வீதியில் அமையப்பெற்ற BLOOMING BUDS முன்பள்ளியில் 2025 ஆம் ஆண்டிற்கான சித்திரை புத்தாண்டு கொண்டாட்டமானது 2025 03.04. ம் திகதி முன் பள்ளி அதிபர் திருமதி காமலிட்டா தேவ நம்பி தலைமையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக முன்பள்ளியின் பணிப்பாளர் eng தேவநம்பி கமலநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வானது சிங்கள கலாசார முறைப்படி முன் பள்ளி சிறார்களால் றபான் அடித்து ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் மாணவர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டார், பின் சித்திரை புத்தாண்டை பற்றி சிறு உரையாற்றப்பட்டு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கை விசேடம் அதிதியால் வழங்கி வைக்கப்பட்டது தொடர்ந்து மாணவர்கள் ஊஞ்சல் ஆடியதோடு , முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைக்கும் போட்டி கயிறு இழுத்தல் போட்டி போன்ற போட்டிகளில் பங்கு பற்றினார்கள் அதனை தொடர்ந்து மாணவர்களும் ஆசிரியர்களும் சித்திரை புத்தாண்டு சிற்றுண்டிகள் உண்டு மகிழ்ந்து புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடினர் .