மட்டக்களப்பு பிராந்திய திறந்த பல்கலைக்கழக நிலையத்தில் Open day 2025.04.04 திகதி மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழக பணிப்பாளர் திரு. D. கமலநாதன் தலைமையில் ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு
பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட பீடாதிபதி பேராசிரியர் தில்லைநாதன்
சதானந்தம் அவர்களும் மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்
திரு. ந. குகதாஷன் மற்றும் மாவட்டக் கல்வியலாளர்கள் என பலரும் கலந்து
கொண்டு இந் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். இரண்டு நாட்கள்
மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி
வரை இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் அதிகூடிய
மாணவர்கள் கற்கை நெறியை தொடரும் வரிசையில் மூன்றாவது இடத்திலிருக்கும்
திறந்த பல்கலைக்கழகமான மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழகத்தில்
முன்னெடுக்கப்படும் கற்கை நெறிகள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும்
நோக்கில் இந்த Open day திட்டமிட்டு விரிவுரையாளர்களாலும் கற்கை நெறிகளை
பயிலும் மாணவர்களாலும் விரிவான விளக்கங்களுடன் நெறிப்படுத்தப்பட்டது.
விஞ்ஞான பீடம் மற்றும் சமூக விஞ்ஞான பீடம் தொழிநூட்ப பீடங்களை
மையப்படுத்தியதாக செயன்முறை ரீதியான விளக்கங்களும் விரிவுரைகளும்
நடைபெற்றது
பாடசாலை மாணவர்கள், இளைஞர் மற்றும் யுவதிகள், கல்வித்
துறை சார்ந்தோர் என பலரும் இந்த நிழ்வை ஆர்வத்துடன் பார்வையிட்டு
பயன்பெற்று வருவதனை நேரடியாக அவதானிக்க முடிந்தது.
இலங்கையிலுள்ள அனைத்து திறந்த பல்கலைக் கழகங்களிலும் Open day நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.