அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Clean Sri Lanka வேலைத்திட்டத்தை செயல் படுத்தும் நோக்கத்தோடு சமூக ஒருமைப்பாடும் கலாச்சாரமும் எனும் தொனிப்பொருளுக்கமைய இன்றைய தினம்2025.04.09 மட்டக்களப்பு மத்திய வீதி " SRI LANCAN NATURE CRECHE & KINDER GARTEN" முன்பள்ளியில் இப்தார் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது.
வளர்ந்து வரும் சிறார்களிடையே மத நல்லிணக்கத்தையும் இன நல்லுறவையும் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஜனார்தனி மகிழ்நம்பி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதியாக முஷ்ஸினாஇக்பால் (muhzina iqbal -vppamember.) கலந்து கொண்டார் .
ஆசிரியர்களும் மாணவர்களும் இஸ்லாமிய கலாசார ஆடையணிந்து , இஸ்லாமிய கலாசார உணவுகளும் , சிற்றுண்டிகளும் பரிமாறி புசித்து மகிழ்ந்தனர் .
நிகழ்வின் முடிவில் சிறார்கள் அனைவருக்கும் இனிப்பு பண்டங்களும் பரிசுப்பொதிகளும் அதிதிகளால் வழங்கப்பட்டன .
முன்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை முதல் தடைவையாக நோன்பு பெருநாள் நிகழ்வு கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும் .
மத நல்லிணக்கத்தையும் இன நல்லுறவையும் வளர்க்கும் உயரிய நோக்கில் நோன்பு பெருநாள் நிகழ்வை கொண்டாடியதியதின் மூலம் இந்த முன் பள்ளியானது மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னுதாரணமாக திகழ்கிறது .